For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எதியூரப்பா

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக முதல்வர் பி.எஸ் எதியூரப்பா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மூத்த பாஜக தலைவரான எதியூரப்பா 2013 சட்டசபைத் தேர்தலில் அப்போது அவர் நடத்தி வந்த கர்நாடக ஜனதாக் கட்சி சார்பில் ஷிகாரிபுரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தனது கட்சியை அவர் மீண்டும் பாஜகவில் இணைத்தார்.

BS Yeddyurappa resigns from MLA post

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஷிமோகா எம்.பி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இத்தேர்தலில் கர்நாடகத்தில் பாஜக 19 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் அவர் தேசிய அரசியலில் ஈடுபடப் போகிறார். இதன் மூலம் அவர் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்த கர்நாடக அரசியலிலிருந்து விடை பெறுகிறார்.

English summary
After elected as a member of parliament from Shimoga Lok Sabha constituency, the former chief minister and a senior BJP leader BS Yeddyurappa has resigned from the MLA post on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X