For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய எல்லைக்குள் வந்த மாற்றுத் திறனாளி பாக். சிறுமியை பாக். வீரர்களிடம் ஒப்படைத்த பி.எஸ்.எப்.

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமியை எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமி ஒருவர் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் செக்டருக்குள் நுழைந்து எல்லை பாதுகாப்பு படையினரின் வேலிக்கு அருகில் வந்துவிட்டார்.

இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த சிறுமியிடம் சென்று விசாரித்தபோது தான் அவருக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை அணுகி மதியம் 2 மணிக்கு சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படை டிஐஜி கடாரியா கூறுகையில்,

பாகிஸ்தான் சிறுமி தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார். அபோஹார் செக்டரில் உள்ள நாதா சிங் வாலா சோதனைச்சாவடி அருகே வந்த சிறுமி நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றார்.

English summary
The Border Security Force (BSF) on Saturday handed back a five-year-old deaf and dumb Pakistani girl to their Pakistani counterparts after she inadvertently crossed over into Indian territory in Punjab`s Abohar sector, a senior BSF official
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X