For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை: இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 7 பாக்.வீரர்கள் பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜம்மு: காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறிய நுழைய முயன்ற பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் இன்று காலை 9.35 மணி அளவில் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரிக்கு உள்பட்ட போபியா பகுதியில் இந்திய நிலைகளை மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சிறிய ரக துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

BSF kills 7 Pak Rangers, one terrorist on Jammu border

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்பிலும் 15 நிமிடம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தத் தகவலை எல்லைப் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இதையடுத்து சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கடந்த மாத இறுதியில் ராணுவம் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லை மற்றும் காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

English summary
Seven Pakistani Rangers or paramilitary soldiers have been killed today by the Border Security Force or BSF along the International Border in the Kathua district of Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X