For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் வருகிறது 40,000 "வைஃபை ஹாட்ஸ்பாட்"! பி.எஸ்.என்.எல். அதிரடித் திட்டம் !

Google Oneindia Tamil News

ஆக்ரா : வாடிக்கையாளர்களை ஈர்க்க நாடு முழுவதும் 40,000 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளதாக தொலைத் தொடர்புத் துறை ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலில் வைஃபை வசதியை ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

bsnl

இதன்மூலம் தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி, முதல் அரை மணி நேரத்துக்கு இலவசமாக வைபை மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். அதன்பின்னர் பயன்பாட்டிற்கு ஏற்ப பணம் செலுத்தி இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் பிளான்கள் உள்ளன.

இத்திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ரவிசங்கர் பிரசாத், நாடு முழுவதும் 40,000 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பி.எஸ்.என்.எல். அமைக்க உள்ளதாக தெரிவித்தார். இத்திட்டம் 2018 ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி இந்தாண்டு 250 இடங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பில் 200 ஹாட் ஸ்பாட்டுகள் நிறுவ திட்டமிடப்பட்டதாகவும், அதில் 200 ஹாட் ஸ்பாட்டுகள் அமைக்கப்பட்டு விட்டதாகவும் பி.எஸ்.என்.எல் தலைமை நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் 30 நிமிடம் மாதம் 3 முறை வைஃபை வசதியை இலவசமாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

30 நிமிடங்கள் முடிந்த பிறகு, ரூ.20, ரூ.30, ரூ.50, ரூ.70 செலுத்தி 30 நிமிடத்திலிருந்து, 2 மணி நேரம் வரை வைஃபை வசதியை பெற முடியும்.

இது தவிர 200 கோடி ரூபாய் மதிப்பில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்தவும் பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது.

English summary
BSNL will set up 40,000 wi-fi hot spots across the country and the project is likely to be completed by 2018," Telecom Minister Ravi Shankar Prasad said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X