For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகிலேஷ் யாதவை அழைக்க சொகுசு காரை அனுப்பிய மாயாவதி.. மெர்சிடஸில் சென்ற தூது!

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை அழைக்க பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி சொகுசு கார் ஒன்றை அனுப்பி உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அகிலேஷ் யாதவுக்கு கார் அனுப்பிய மாயாவதி- வீடியோ

    லக்னோ: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை அழைக்க பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி சொகுசு கார் ஒன்றை அனுப்பி உள்ளார். இதற்காக மெர்சிடஸ் நிறுவன காரை அனுப்பி வைத்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் அமைத்த கூட்டணி காரணமாக வெற்றி கிட்டி இருக்கிறது. இதனால் நேற்று இரு கட்சி தலைவர்களும் சந்தித்துக் கொண்டார்கள்.

    தூது அனுப்பினார்கள்

    தூது அனுப்பினார்கள்

    முதலில் அகிலேஷ் யாதவிடம் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முக்கியமான நபர் ஒருவர் பேசி இருக்கிறார். மாயாவதி உங்களை பார்க்கக் விரும்புகிறார் என்று கூறியுள்ளார். அதற்கு அகிலேஷ் யாதவ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    தொலைபேசியிலும் பேசினார்

    தொலைபேசியிலும் பேசினார்

    ஆனால் இந்த சந்திப்பிற்கு முன் நேற்று மாலையே இருவரும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள். வெற்றி பெற்றது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது அகிலேஷ் யாதவை மாயாவதி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து இருக்கிறார்.

    மெர்சிடஸ் கார்

    மெர்சிடஸ் கார்

    வீட்டிற்கு அழைத்தது மட்டும் இல்லாமல், அவரை அழைக்க மெர்சிடஸ் சொகுசு காரை அனுப்பி வைத்துள்ளார். நேற்று மாலை மாயாவதியின் சொந்த மெர்சிடஸ் கார் அகிலேஷ் வீட்டிற்கு சென்று இருக்கிறது. 30 வருட பகைக்கு மெர்சிடஸ் கார் தூது சென்றுள்ளது.

    நன்றி தெரிவித்தார்

    நன்றி தெரிவித்தார்

    இவர்கள் சந்திப்பு நினைத்த நேரத்தை விட நேற்று அதிக நேரம் நீடித்துள்ளது. தேர்தலில் நல்ல ஒத்துழைப்பு வழங்கியதற்கு அகிலேஷ் யாதவ் மாயாவதிக்கு நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கதவை திறந்துள்ளது.

    English summary
    Hours after his party's bypoll win, SP chief Akhilesh Yadav met BSP chief Mayawati at her residence after she sent a Mercedes to fetch him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X