For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உபி தேர்தலில்.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் தோல்வி.. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கலை

உபி தேர்தலில் பகுஜன் சமாஜ் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    மாயாவதியும் அகிலேஷும் மீண்டும் கை கோர்த்தால்தான் வெல்ல முடியும்

    லக்னோ: உத்தரப் பிரதேச சட்டசபை இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கணிசமான வாக்குளை வாங்கி சவால் கொடுத்திருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட அது ஜெயிக்கவில்லை. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 11 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு இடத்தில் கூட பகுஜன் சமாஜ் கட்சி ஜெயிக்கவில்லை.

    இக்கட்சியின் துரதிர்ஷ்டம் 2014ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட பகுஜன் சமாஜ் வெல்லவில்லை. இதையடுத்து 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதில் சற்று ஆறுதல் கிடைத்தது. அதாவது உபியில் 10 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் வென்றது.

    பாஜக தங்கை பங்கஜாவை தோற்கடித்தது.. வலியா இருக்கு.. தேசியவாத காங். அண்ணனின் வருத்தம்!பாஜக தங்கை பங்கஜாவை தோற்கடித்தது.. வலியா இருக்கு.. தேசியவாத காங். அண்ணனின் வருத்தம்!

    தனித்து போட்டி

    தனித்து போட்டி

    இதையடுத்து 2022ல் வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சமாஜ்வாடிக் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. இந்த இடைத் தேர்தலில் அது தனித்துப் போட்டியிட்டது. ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாகி விட்டது. அதாவது சமாஜ்வாடிக் கட்சியை விட்டுப் பிரிந்ததன் விளைவை அது அனுபவித்துள்ளது.

    ஒரு இடம்

    ஒரு இடம்

    11 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் தோல்வியைச் சந்தித்துள்ளது. சில தொகுதிளில் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது. இங்கு பாஜக 6 இடங்களில் வென்றுள்ளது. சமாஜ்வாடிக் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு முக்கியமான தொகுதி ஜலாபூர். அதையும் அது இழந்துள்ளது. அதேபோல லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் 4வது இடத்தைப் பிடித்து அதிர வைத்துள்ளது.

    அருண் திவிவேதி

    அருண் திவிவேதி

    இங்கு பிராமண வாக்குகள் அதிகம். எனவே அந்த சமூகத்தைச் சேர்ந்த அருண் திவிவேதியை வேட்பாளராக நிறுத்தியும் நான்காவது இடமே கிடைத்துள்ளது. ராம்பூர் தொகுதி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதி. அங்கு ஜுபைர் மசூத் கான் போட்டியிட்டு நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதேபோலத்தான் ஜைத்பூர் தொகுதியிலும் பரிதாப நிலை. மாணிக்பூர் தொகுதியில் 3வது இடம் கிடைத்துள்ளது.

    மாயாவதி

    மாயாவதி

    கடந்த தேர்தலில் பெற்றதை விட இந்த இடைத் தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதம் பெருமளவில் சரிந்துள்ளது. இது கட்சித் தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. ஆனால் தேர்தல் முடிவு குறித்து முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி இதுவரை கருத்து ஏதும் சொல்லாமல் உள்ளார்.

    English summary
    haryana and maharashtra election result: BSP failed to shine in UP assembly by polls
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X