For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்கு சதவீதம்.. 'முட்டை' வாங்கிய பகுஜனுக்கு மூன்றாவது இடம்!! 37 வாங்கிய அதிமுகவுக்கு 6வது இடம்!!

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் நாட்டின் 3வது பெரிய கட்சியாக ஒரு இடத்திலும் கூட வெல்லாத பகுஜன் சமாஜ் கட்சி இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையைத் தாண்டி 282 இடங்களைக் கைப்பற்றியது. 2வது பெரிய கட்சியாக காங்கிரஸ் 44 தொகுதிகளில் வென்றுள்ளது. 3வது பெரிய கட்சியாக அதிமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

அதே நேரத்தில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஒரு இடத்தில் கூட வெல்லாத பகுஜன் சமாஜ் கட்சி 3வது இடத்தில் இருக்கிறது.

தேசிய அளவில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்:

பாஜக- 31%

பாஜக- 31%

பாரதிய ஜனதா கட்சி 31% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மொத்தம் 17 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 549 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

காங்கிரஸ் 19.3%

காங்கிரஸ் 19.3%

காங்கிரஸ் கட்சியோ 19.3% வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 10 கோடியே 69 லட்சத்து 36 ஆயிரத்து 765 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் 4.1%

பகுஜன் சமாஜ் 4.1%

லோக்சபா தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத பகுஜன் சமாஜ் கட்சி 4.1% வாக்குகளைப் பெற்று 3வது இடத்தில் உள்ளது. அது 2 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 102 வாக்குகளை பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 3.8%

திரிணாமுல் காங்கிரஸ் 3.8%

திரிணாமுல் காங்கிரஸ் 3.8% சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடியே 12 லட்சத்து 59 ஆயிரத்து 681 வாக்குகள் கிடைத்துள்ளன.

சமாஜ்வாடிக்கு 3.4%

சமாஜ்வாடிக்கு 3.4%

வெறும் 5 இடங்களைக் கைப்பற்றிய சமாஜ்வாடி கட்சி 3.4% வாக்குகளுடன் 5வது இடத்தில் உள்ளது. சமாஜ்வாடிக்கு 1 கோடியே 86 லட்சத்து 72 ஆயிரத்து 916 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

அதிமுகவுக்கு 6வது இடம்

அதிமுகவுக்கு 6வது இடம்

37 இடங்களைப் பெற்று சீட்டு எண்ணிக்கையில் அதிமுக 3வது பெரிய கட்சியாக இருந்தாலும் 3.3% பெற்று 6வது இடத்தில் இருக்கிறது. அதிமுகவுக்கு 1 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 825 வாக்குகள் கிடைத்துள்ளன.

7வது இடத்தில் சிபிஎம்

7வது இடத்தில் சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3.2%த்துடன் 7வது இடத்தில் உள்ளது. அக்கட்சி மொத்தம் 1 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரத்து 773 வாக்குகளைப் பெற்றுள்ளது.

திமுக 13வது இடத்தில்..

திமுக 13வது இடத்தில்..

அதேபோல் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லாத திமுக 13வது இடத்தில் இருக்கிறது. அக்கட்சி தேசிய அளவில் 1.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 96 லட்சத்து 36 ஆயிரத்து 430 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பிஜூ ஜனதா தளம் 14வது இடம்..

பிஜூ ஜனதா தளம் 14வது இடம்..

20 தொகுதிகளை வென்ற பிஜூ ஜனதா தளம் கூட 1.7% வாக்குகளுடன் 14 வது இடத்தில்தான் உள்ளது. அக்கட்சிக்கு 94 லட்சத்து 91 ஆயிரத்து 497 வாக்குகள் கிடைத்துள்ளன.

English summary
One of the most curious stories from the 2014 Lok Sabha polls will be that of the BSP, which, despite getting the third-highest vote share of just over four per cent, did not win a single seat. As per data available at the time of filing this report, the BSP polled 2.29 crore votes and had a vote share of 4.2 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X