For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: மாயாவதி அறிவிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, தனது பிறந்த நாளான இன்று, தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

mayavati

அப்போது அவர் பேசுகையில், ''எங்கள் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்களை அகிலேஷ் ஆட்சி கிடப்பில் போட்டு விட்டது. எங்கள் அரசியல் எதிரியான அவர்களை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் 80 இடங்களிலும் நேருக்கு நேர் சந்திப்போம். காங்கிரசுடனோ, பாஜக உடனே கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதில்லை.

கடந்த 2003ஆம் ஆண்டில் கூட்டணியில் சேர, பா.ஜ.க., சி.பி.ஐ. மூலமாக நெருக்கடி கொடுத்தது.

தற்போதும், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அளவிலோ அல்லது உத்தர பிரதேச தேர்தலிலோ காங்கிரசுடன் எந்த கூட்டணியும் வைக்காது'' என்றார்.

English summary
Kicking off her party's election campaign at a mega rally here, Mayawati today said BSP would not forge an alliance with Congress, BJP or any other party and would go it alone in the Lok Sabha polls. "BSP will fight the Lok Sabha elections across the country, alone," she said, addressing 'Savdhan Vishal Maharally' here, coinciding with her birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X