For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் ஸ்பெஷல்: தங்கம் விலை குறையப் போகுதாமே!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: இன்றைய மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

நாட்டின் நகை வாங்கும் மோகத்தால் நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி பணம் டாலர்களாக மாறி வெளிநாடுகளுக்குப் போய், தங்கமாக மாறி நாட்டுக்குள் வருகிறது.

இதனால் கச்சா எண்ணெய் வாங்க, மிக அவசிமான இறக்குமதிகளுக்குக் கூட அன்னியச் செலாவணிக்கு மத்திய அரசு அல்லாடும் நிலை ஏற்படுகிறது.

Jaitley is expected to slash duty on gold

இதனால் தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கிறோம் என்று அதன் மீதான இறக்குமதி வரியை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்திக் கொண்டே போயினர் முந்தைய நிதியமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரமும்.

இதன் காரணமாக நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ஓரளவுக்கு ஸ்திரமாகிவிட்டது. இதனால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான பெரிய அளவிலான பற்றாக்குறையும் குறைந்துவிடும்.

நிலைமை ஓரளவுக்கு சீராக உள்ளதாலும், இராக் பிரச்சனைக்கு மத்தியிலும் கச்சா எண்ணெய் விலை ஸ்டெடியாக உள்ளதாலும் நிதியமைச்சர் ஜேட்லி தைரியமாக தங்க இறக்குமதி மீதான வரியைக் குறைப்பார் என்று கூறப்படுகிறது.

பெரிய தங்க வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் பாஜக தரப்புக்கு நெருக்கமானவர்கள் என்பதை மறந்துவிட்டுப் பார்த்தால் இது தங்கத்தின் விலையைக் குறைக்க பெருமளவு உதவும் என்பதை மறுக்க முடியாது.

தங்க இறக்குமதி மீதான வரியை 10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் கூட ஜேட்லி குறைத்தாலும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறலாம்.

The government can also announce changes in indirect taxes that will impact many consumers. Mr Jaitley is expected to slash duty on gold, which currently stands at 10 per cent. Gold duty was hiked to dis-incentivize imports and bring down current account deficit. Both objectives have been met. Most analysts expect import duty on gold to come down by 2 per cent. This will bring down jewellery costs.

English summary

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X