For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அணு மின் நிலைய 2வது பிரிவிலும் இந்த நிதி ஆண்டிலேயே மின் உற்பத்தி: அருண் ஜெட்லி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பாண்டில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 2 வது பிரிவில் மின் உற்பத்தி துவக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை லோக்சபாவில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

Budget 2015: Second unit of Kudankulam nuclear power station by 2015-16

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் உலையில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டிலே கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 2வது பிரிவில் கூடுதல் மின் உற்பத்தி துவக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

5 மிகப்பெரிய மின் திட்டங்கள்

நாட்டில் 5 மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படும். இதன்மூலம் நாள்தோறும் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

1,75000 மெகாவாட் மின்சாரம்

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணு உலையில் முழு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மரபுசாரா எரிசக்தி துறை மூலம் 1,75,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.

English summary
Finance Minister Arun Jaitley on Saturday announced that the second unit of Kudankulam nuclear power station in Tamil Nadu would be commissioned in 2015-16. He also proposes to set up 5 ultra mega power projects, each of 4000 MW, which will be plug and play projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X