For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 6% உயர்வு... எட்டா கனவாகும் விமான பயணம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 6% உயர்த்தப்பட்டுள்ளதால் விமான கட்டணங்கள் அதிக அளவு உயர வாய்ப்புள்ளது.

அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில், ஜெட் விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 8%-ல் இருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களுக்கு இந்த வரி உயர்வு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Budget 2016: Air travel to become expensive

ஏற்கனவே விமானங்களை இயக்குவதற்கான செலவில் 40% எரிபொருளுக்கு ஆகிறது; ஆகையால் எரிபொருள் மீதான உற்பத்தி வரியை குறையுங்கள் என்பது விமான நிறுவனங்களின் புலம்பல். தற்போது விமான எரிபொருள் மீது உற்பத்தி வரி 6% உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் விமான கட்டணங்களும் கணிசமாக அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் போது விமானத்தில் பயணம் மேற்கொள்வது என்பது கனவாகிப் போய்விடும்.

English summary
Arun Jaitley has proposed in Union Budget 2016-17 a hike of 6% in excise duty on jet fuel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X