For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலீடு, விவசாயிகள், வேளாண்மை... பட்ஜெட் தாக்கலின் போது எத்தனை முறை சொன்னார் தெரியுமா ஜேட்லி?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த போது உச்சரித்த வார்த்தைகளில் அதிகமானவை முதலீடு, விவசாயிகள், வேளாண்மை...என்பவைதான்.

லோக்சபாவில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அவரது உரையில் முதலீடு என்ற வார்த்தையை 37 இடங்களில் பயன்படுத்தினார்.

Budget 2016: Arun Jaitley used the word 'farmer' 32 times in his speech

மேலும் வளர்ச்சி என்ற வார்த்தையை பட்ஜெட்டில் 20 முறை பயன்படுத்தினார். விவசாயிகள் என்ற வார்த்தையை 32 முறையும் வேளாண்மை என்ற வார்த்தையை 24 முறையும் பயன்படுத்தினார் ஜேட்லி.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முதலீடு என்கிற வார்த்தையை அவர் 60 முறையும் விவசாயிகள் என்பதை 27 முறையும் அவர் பயன்படுத்தி இருந்தார்.

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வளர்ச்சி என்ற வார்த்தையை 32 முறை கூறினார். அதே நேரத்தில் முதலீடு என்ற வார்த்தையை 11 இடங்களில்தான் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வேலை, திறன், இளைஞர், ஏழை, பற்றாக்குறை, சரிவு, பணவீக்கம் போன்ற வார்த்தைகள் கடந்த கால பட்ஜெட்களில் அதிகமாக இடம்பெற்றன. ஆனால், ஜேட்லி இந்த வார்த்தைகளை ஓரிரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Finance minister Arun Jaitley on Monday laid much emphasis on farmers, agriculture, growth, investment and infrastructure in his Budget speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X