For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகரெட்டை கைவிட சரியான சந்தர்ப்பம்... கார், நகைகள், பிரிட்ஜ் விலைகள் விர்ர்...

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் புகையிலைப் பொருட்கள், கார்கள், பிரிட்ஜ்கள், நகைகள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் இவற்றின் விலைகள் கணிசமாக உயருகின்றன.

லோக்சபாவில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் புகையிலை பொருட்கள், கார்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

Budget 2016: Cars, SUVs, Cigarettes to cost more

பீடி தவிர்த்த புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10%-ல் இருந்து 15%ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் கணிசமாக உயர உள்ளது. ஆகையால் புகைபழக்கத்துக்கு அடிமையானோர் அதை விட்டுத்தொலைக்க இதுவே சரியான சந்தர்ப்பமாகும்.

அதேபோல் ரெப்ஜிரிரேட்டர் உதிரி பாகங்கள் உற்பத்தி வரி 5-ல் இருந்து 6%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளியை தவிர மற்ற நகைகளுக்கு கலால் வரி 1% உயர்வு எனவும் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.

இந்த வரி உயர்வால் பிரிட்ஜ்கள், நகைகள் விலையும் கணிசமாக அதிகரிக்கும். மேலும் எல்ஜிபி, சிஎன்ஜி உள்ளிட்ட இதர வகை கார்களுக்கும் 1% உள்கட்டமைப்புகளுக்கான வரி விதிப்பு அதிகரிக்கப்படும்; இது சிறிய ரக கார்களுக்கு 1%; டீசல் கார்களுக்கு 2,5%; சொகுசு கார்களுக்கு 4.5% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்களின் விலையும் உயர உள்ளது.

English summary
Prices of cars, utility vehicles and luxury cars are set to go up after Finance Minister Arun Jaitley proposed a 1 per cent cess on LPG, CNG and other cars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X