For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் முறையா வீடு வாங்கப் போறிங்களா? உங்களுக்கு வரிச் சலுகை இருக்கு!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: முதல் முறையாக ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை, 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

2016 -17 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார் .

Budget 2016: First time home buyers to get additional deduction of Rs 50,000

பிரிவு 87-ஏ-யின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு ரூ.3,000 வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.

•அதேபோல் சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ் தொகை பெறாதவர்களுக்கும் அருண் ஜேட்லி சலுகை அறிவித்துள்ளார்.

• இவர்கள் இதுவரை ஆண்டுக்கு ரூ.24,000 வரை வரிச்சலுகை பெற்று வந்தனர். இது தற்போது ரூ.60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

• 60 சதுர மீட்டர்களுக்கு குறைவாக கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரி இல்லை.

• முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ.50,000 கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

• ஆனால் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த வட்டிச்சலுகை பொருந்தும்.

• இது வாடகை வீட்டில் வசிப்போருக்கு பயனளிக்கும் என்று அருண் ஜெட்லி தெரிவித்தார். மேலும் வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

• ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 நிவாரண விலக்கு : இதனால் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயன் பெறுவார்கள்.

• ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ரூ.2,000 லிருந்து ரூ.5,000 மாக உயர்த்தப்படுகிறது.

•ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல்.

•இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.

English summary
By introducing an additional deduction of Rs 50,000 in the Budget 2016 proposal, Finance Minister Arun Jaitley has given some reason to cheer to the first time home buyers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X