For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2018: ரயில்கள், ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த ரூ. 3000 கோடி நிதி

நாடுமுழுவதும் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் 2018 : ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் 8 கேமராக்கள் வரை பொறுத்த முடிவு

    டெல்லி: நாட்டில் உள்ள 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு 2018 -19 பட்ஜெட் தாக்கலின்போது வெளியாக உள்ளது.

    பிப்ரவாி 1ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் ரயில்வே துறையில் பாதுகாப்புகளை அதிகாிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள ரயில் நிலையங்கள் பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன. தலைநகரின் நடுவில் அமைந்துள்ள நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிகாலையில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டதால் சுவாதியை கொன்றது யார் என்பது பற்றி கண்டுபிடிக்க கடும் சிரமம் ஏற்பட்டது. இதுபோல ரயில்களில் திருட்டுக்கள் நடைபெறுவதும், குற்றங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகிறது. சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டால் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிசிடிவி கேமராக்கள்

    சிசிடிவி கேமராக்கள்

    தற்போதைய நிலையில் சுமாா் 395 ரயில் நிலையங்களிலும், 50 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் 8 கேமராக்கள் வரை பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு சாதனங்கள்

    கண்காணிப்பு சாதனங்கள்

    சுமார் 12 லட்சம் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இனி குறைந்தபட்சம் எட்டு கேமராக்கள் பொருத்தப்படும். அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ், சொகுசு ரயில்களிலும் நவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன.

    அனைத்து ரயில் நிலையங்கள்

    அனைத்து ரயில் நிலையங்கள்

    கடந்த ஆண்டில் அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அதிக அளவிலான நிதியை ரயில்வே துறைக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2020க்குள் ஆள் இல்லா லெவல் கிராசிங்

    2020க்குள் ஆள் இல்லா லெவல் கிராசிங்

    ஆள் இல்லா லெவல் கிராசிங்குகள் அருகில் பாலங்கள் அமைப்பதற்காகவும், பழைய தண்டவாளங்களை மாற்றியமைக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட உள்ளது. வருகிற 2020ம் ஆண்டுக்குள் ஆள் இல்லா ரயில்வே கிராசிங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Indian Railways is pitching for the procurement of about 12 lakh CCTV cameras to ensure state-of-the-art surveillance systems in all trains and stations across the country. The Railways will make a provision of around Rs 3,000 crore in its budget for 2018-19 to install CCTV systems in all 11,000 trains
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X