For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 கோடி குடும்பங்களுக்கு பலன்.. உலகின் மிகப்பெரிய ஆரோக்கிய காப்பீடு திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பு - வீடியோ

    டெல்லி: அமெரிக்காவின் ஒபாமா கேர் போல இந்தியாவில் மிகப்பெரிய ஆரோக்கிய காப்பீடு திட்டத்தை கொண்டுவருகிறது மத்திய அரசு. இன்றைய பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அதை அறிவித்தார்.

    தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் எந்ற பெயரில் 10 கோடி ஏழை, எளிய குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு வழங்குவது இந்த திட்டத்தின் அடிப்படை.

    10 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, தலா ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும் என்று ஜேட்லி தனது உரையில் குறிப்பிட்டார்.

    ரூ.5 லட்சம்

    ரூ.5 லட்சம்

    ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ செலவீனங்களுக்கு இந்த காப்பீடு திட்டத்தை பயன்படுத்தி மக்கள் பலன் பெற முடியும் என்பதால், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

    பங்குகள் ஏற்றம்

    பங்குகள் ஏற்றம்

    இதை உலகின் மிகப்பெரிய ஆரோக்கிய திட்டம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். எனவேதான் மருத்துவ துறை பங்குகளும் நல்ல ஏற்றம் கண்டன.

    ஏற்கனவே அறிவித்ததுதான்

    ஏற்கனவே அறிவித்ததுதான்

    ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த திட்டத்தை 2016ல் பட்ஜெட் உரையின்போது ஜேட்லி அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு, சுதந்திரதின உரையில் பிரதமர் மோடியும் இதை குறிப்பிட்டார். ஆனால், 2016 நவம்பர் முதல் இந்த திட்டம், அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்காமல் நிலுவையில்தான் உள்ளது.

    தேர்தலுக்காக செயல்படுத்தலாம்

    தேர்தலுக்காக செயல்படுத்தலாம்

    பல மாநில சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ளன. தேர்தல் காலம் என்பதால் இந்த முறை, அறிவிப்பு நடைமுறைக்கு வரலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

    English summary
    Finance Minister Arun Jaitley on Thursday announced that the government will launch flagship National Health Protection scheme intended to cover 10 crore poor and vulnerable people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X