For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனிமேல்தான் சிக்கலே.. வருமான வரி செலுத்துவதில் ஏற்பட போகும் குழப்பங்கள்.. என்ன பிரச்சனை?

மத்திய அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகி இருக்கும் வருமான வரி சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக, இனிமேல் வருமான வரி செலுத்துவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட்டில் கவனிக்கபட முக்கியமாக வேண்டிய விஷயங்கள் என்ன | Budget 2020: key things to watch for

    டெல்லி: மத்திய அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகி இருக்கும் வருமான வரி சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக, இனிமேல் வருமான வரி செலுத்துவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். அரசு அளித்து இருக்கும் ஆப்ஷன்களில் எதை தேர்வு செய்வது என்று குழப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. ஆனால் இந்த வருமான வரி அறிவிப்புகள், சீர் திருத்தங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் முன் இதுவரை விதிக்கப்பட்ட வந்த வருமான வரி விதிப்புகள் குறித்து தெரிவித்து கொள்ள வேண்டும்.

    பட்ஜெட் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம் பட்ஜெட் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம்

    நாட்டில் இப்போது எப்படி

    நாட்டில் இப்போது எப்படி

    நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்த தொகையும் ரிட்டர்ன்ஸ் செலுத்தும் போது ரிபேட் தொகையாக மீண்டும் வருமான வரி செலுத்தியவருக்கே அளிக்கப்பட்டு விடும். இது போக ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.

    எப்படி எல்லாம்

    எப்படி எல்லாம்

    இதில் வருமான வரி செலுத்தும் முன் வரிக்கழிவு சலுகையும் கிடைக்கும். அதாவது வீட்டு வாடகை, இன்சூரன்ஸ் உட்பட 70க்கும் மேற்பட்ட வரிக்கழிவு சலுகைகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் நாம் கட்டும் வருமான வரியில் பெரும்பாலான தொகை குறையும். ஆனால் இப்போது இந்த வரிக்கழிவு சலுகைக்குத்தான் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரியை குறைப்பது போல அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பிற்கு பின் நிறைய சிக்கல்கள் இருக்கிறது.

    புதிய அறிவிப்பு

    புதிய அறிவிப்பு

    புதிய அறிவிப்பின்படி ஆண்டுக்கு, 2.5 லட்சம் வருமானம் இருந்தால் வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரி செலுத்த வேண்டும். 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். 7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும், 10 லட்சம் முதல் 12.50 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.

    வேறு என்ன

    வேறு என்ன

    12.50 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும், 15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
    வெளியிட்டுள்ளார். ஆனால் இங்குதான் அரசு முக்கியமான செக் ஒன்றை வைத்துள்ளது. நாம் இந்த வரிசலுகையை தேர்வு செய்தால் வரிக்கழிவு சலுகை எதையும் தேர்வு செய்ய முடியாது. வரிக்கழிவு சலுகையை தேர்வு செய்தால், இந்த புதிய வரி சதவிகித சலுகையை தேர்வு செய்ய முடியாது.

    வரி சலுகை

    வரி சலுகை

    மொத்தம் 70க்கும் அதிகமாக வரிக்கழிவு சலுகைகள் இருக்கிறது. பிஃஎப், ஐந்து வருட நிரந்தர வைப்புத்தொகை, தேசிய சேமிப்பு பத்திரம், கிஷன் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்பு திட்டம், என்பிஎஸ், லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான வரிச்சலுகைகள், வீட்டு கடன் மற்றும் வீட்டுக் கடன் வட்டி ஆகிய சலுகைகளை வேண்டாம் என்று சொன்னால்தான், புதிய வருமான வரி சதவிகிதத்தை தேர்வு செய்ய முடியும்.

    ஏன் செக்

    ஏன் செக்

    இந்த வருமான வரி சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக, இனிமேல் வருமான வரி செலுத்துவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். அரசு அளித்து இருக்கும் ஆப்ஷன்களில் எதை தேர்வு செய்வது என்று குழப்பங்கள் ஏற்படவும் வாப்புகளை அதிகம். பழைய முறைப்படி வருமான வரிக்கழிவு சலுகைகளை பெறுவது சரியா, அல்லது புதிய வருமான சதவிகித சலுகைகளை பெறுவது சரியா என்று குழப்பம் ஏற்படும். இரண்டு சலுகைகளையும் ஒப்பிட்டு ஒவ்வொரு முறையும் கணக்கு போட நேரிடும்.

    உண்மை என்ன

    உண்மை என்ன

    ஆனால் உண்மையில் இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதற்கு முன் கட்டிய அதே வரியைத்தான் இதிலும் கட்ட வேண்டிய சூழ்நிலை இதனால் ஏற்படும் என்கிறார்கள். அதாவது வரியை குறைப்பது போல குறைத்து வேறு இடத்தில் செக் வைத்துள்ளனர். அதாவது உணவு ஆர்டர் செய்யும் போது ஆபர் கொடுத்துவிட்டு, டெலிவரிக்கு கூடுதல் தொகை விதிப்பது போல செய்து இருக்கிறார்கள்.

    இன்னும் போக இன்னும் சில வருடங்களில் வரிக்கழிவு சலுகைகளை மொத்தமாக நீக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் நேரடியாக எல்லோரும் புதிய வரி சதவிகித ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.

    English summary
    Budget 2020: New Income tax rate announcement may create a lot of confusions in coming days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X