For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாடு வளர்ப்போர் வயிற்றில் பால் வார்த்த பட்ஜெட்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020: Free solar panel will be given to farmers

    டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் பால்வளத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக பால் தொழில் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    2020-21 நிதியாண்டில் 10000 டன் ஆடை நீக்கிய பால் பவுடர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய சுங்கவரியில் 15 சதவீத சலுகை தரப்பட்டது. ஆனால் அந்த சலுகை இப்போது பட்ஜெட் நீக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து இறக்குமதிக்கும் 60 சதவீதம் வரி கட்டாயமாகிறது.

    இதேபோல் . 2020-21க்கான பட்ஜெட்டில் சீஸ், வெண்ணெய், வெண்ணெய் எண்ணெய் ஆயில் மற்றும் நெய் ஆகியவற்றின் அடிப்படை சுங்க வரியை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

    பட்ஜெட் பத்தி பேச கமல்ஹாசன் ஒன்றும் பொருளாதார மேதை கிடையாது.. ராஜேந்திர பாலாஜி பட்ஜெட் பத்தி பேச கமல்ஹாசன் ஒன்றும் பொருளாதார மேதை கிடையாது.. ராஜேந்திர பாலாஜி

    வரவேற்பு

    வரவேற்பு

    இது தொடர்பாக கூட்டுறவு பால் உற்பத்தி சங்க அதிகாரி கூறுகையில், "அனைத்து பால் பொருட்களின் இறக்குமதி வரியையும் உலக வர்த்தக அமைப்பு விதிகளின் கீழ் அதிகபட்சமாக அனுமதிக்கக்கூடிய வரம்புக்கு உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு சிறந்த பால் கொள்முதல் விலையை செலுத்த எங்களுக்கு உதவும்" என்றார்.

    இறக்குமதி வரி

    இறக்குமதி வரி

    கடந்த வருடம் 21-22 ரூபாய் ஆக இருந்த ஆடை நீக்கிய பாலின் கொள்முதல் விலை இந்தியாவில் கடந்த ஆண்டு இருமடங்காக அதாவது 31-32 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் மற்றும் தனியார் பால்பண்ணை அதிபர்கள், ஆடை நீக்கிய பால் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க அழுத்தம் கொடுத்து வந்தனர். இருந்த போதிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கலப்படம் இருக்காது

    கலப்படம் இருக்காது

    இதை வரவேற்றுள்ள கூட்டுறவு சங்கத்தினர், "பட்ஜெட் முடிவை நாங்கள் வரவேற்கிறோம், ஏனெனில் விவசாயிகளுக்கு நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது தான் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இறக்குமதி செய்யப்படும் ஆடை நீக்கப்பட்ட(எஸ்.எம்.பி.) பால் பவுடர்களை அதற்கு பதிலாக கலப்படம் செய்வது இனி குறையும் என்றார்கள்.

    இனிமேல் 22 சதவீத வரிதான்

    இனிமேல் 22 சதவீத வரிதான்

    கிராம அளவிலான கூட்டுறவு சங்கங்கள் இலாபங்களுக்கு விதிக்கப்படும் வரியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு 30 சதவீத வரிக்கு பதிலாக இனிமேல் 22 சதவீதம் வரியே விதிக்கப்பட உள்ளது. அதேநேரம் மாவட்ட அளவிலான தொழிற்சங்கங்கள் (கிராம கூட்டுறவு நிறுவனங்களின் ஆதாரம்) மற்றும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (அமுல் என அழைக்கப்படும் ஜி.சி.எம்.எம்.எஃப்) போன்ற மாநில அளவிலான கூட்டமைப்புகளுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

    காப்பாற்றினார்

    காப்பாற்றினார்

    ஒட்டுமொத்தமாக பார்த்தால் கிராமப்புற மக்களின் முக்கிய ஆதாரமாக உள்ள பால் வளர்ப்பு தொழிலை காப்பாற்றும் வகையில் பால் பொருட்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தி உள்ளது. இதனால் பால் மாடு வளர்ப்போருக்கு இந்த பட்ஜெட் பால் வார்த்துள்ளதாக சொல்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களும் தங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ளன. அதேநேரம் கார்ப்பரேட் பால் விற்பனையாளர்களுக்கு வரிகள் குறைக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman’s second Budget has received a thumbs-up from the dairy industry as well as cooperatives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X