For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.. பட்ஜெட் தாக்கல் செய்து அருண் ஜேட்லி பேச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் லோக்சபா உறுப்பினர் அகமது மறைவை தொடர்ந்து மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுமா என்ற சந்தேகம் கிளம்பியது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியதில் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. குடியரசு தலைவர் உரையின்போது கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி லோக்சபா எம்.பி இ.அகமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) திடீரென மயங்கி சாய்ந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். மாரடைப்பால் அகமது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget won't be postponed, Fin Min sources

இதுபோன்ற சூழலில் நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்துவிட்டு அவையை ஒத்தி வைப்பது மரபு. எனவே இன்று தாக்கல் செய்யவிருந்த பட்ஜெட் தள்ளிப்போகும் என்ற ஒரு தகவல் பரவியிருந்தது.

ஆனால், காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக அகமது மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக, காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, கமல்நாத் உள்ளிட்ட சில எம்.பிக்கள் பட்ஜெட்டை ஒத்தி வைத்து இன்னொரு நாளில் தாக்கல் செய்ய வலியுறுத்தினர். ஆனால் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்வதில் உடன்பாடு ஏற்பட்டது. கார்கே கோரிக்கையை சபாநாயகரும் ஏற்க மறுத்துவிட்டார்.

English summary
Sources in the Finance Ministry tell OneIndia that the budget is unlikely to be postponed. There were rumours on Wednesday that the budget session is likely to be postponed in the wake of the death of former Union Minister E Ahamed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X