For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர்கள் ஆர்டர் போட்டா அதிகாரிகள் எஸ் சார்னு வேலையை பார்க்கனும்..மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

Google Oneindia Tamil News

நாக்பூர்: அமைச்சர்கள் ஆர்டர் போட்டால் எஸ் சார் என சொல்லிவிட்டு அதிகாரிகள் உடனே வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மகாராஷ்டிரா பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: அதிகாரிகளுக்கு எப்போதும் நான் ஒன்றைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறேன்... நீங்கள் சொல்கிறபடி எல்லாம் அரசாங்கம் செயல்பட்டுக் கொன்டிருக்க முடியாது.

Bureaucrats just have to say yes : Nitin Gadkari

அதிகாரிகளைப் பொறுத்தவரையில் எஸ் சார் என்பதை மட்டும்தான் சொல்ல வேண்டும். நாங்கள் அமைச்சர்கள் என்ன சொல்கிறோமே அதை செயல்படுத்துவதான் உங்களது வேலை. எங்களுடைய சொல்படிதான் அரசாங்கம் செயல்பட வேண்டும்.

என்னாது.. சென்னை - சேலம் 8 வழிச்சாலை வரப்போகிறதா? லோக்சபாவில் நிதின் கட்கரி அளித்த பதில் இதுதான்!என்னாது.. சென்னை - சேலம் 8 வழிச்சாலை வரப்போகிறதா? லோக்சபாவில் நிதின் கட்கரி அளித்த பதில் இதுதான்!

மக்களுக்கான பணிகளை செய்வதற்கு சட்டங்கள் தடையாக இருக்கலாம்.. அப்படிப்பட்ட சட்டங்களை 10 முறை வேண்டுமானாலும் உடைக்கலாம்.வ சட்டங்களை உடைக்கக் கூடிய அதிகாரங்கள் அமைச்சர்களுக்கு உண்டு. அது தப்பே இல்லை. இதனைத்தான் மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார்.

1995-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் முதல்வராக மனோகர் ஜோஷி பதவி வகித்தார். அப்போது கட்ரிச்சோலி, மீல்காட் பகுதியில் சத்துணவுக் குறைபாடால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தனர். அப்பகுதியில் சாலைகளை சீரமைக்க வனத்துறை சட்டங்கள் தடையாக இருந்தன. அதனையும் மீறித்தான் நாம் சாலை உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்தினோம். ஆகையால் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்படிதான் கேட்க வேன்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

English summary
Union Minister Nitin Gadkari said that the ministers have right to break laws; Bureaucrats just have to say yes only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X