For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு!

Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டது. நூலகத்தை சிங்கள காடையர்கள் எரித்த போது சாட்சியமாக இருந்த முதன்மை நூலகர் ரூபா நடராஜா தமது அனுபவங்களை தொகுத்து எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது.

தமிழர்களின் கலாசார அடையாளமான தொன்மையின் சின்னமாக விளங்கியது யாழ்ப்பாண பல்கலைக் கழகம். தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம் அது.

1933-ம் ஆண்டு முதல் மெது மெதுவாக உருவாக்கப்பட்டு தென்னாசியாவின் பிரமிக்கத்தக்க நூலகமாக வளர்ந்தது. 1959-ம் ஆண்டு நூலகமானது புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

38 ஆண்டுகள்

38 ஆண்டுகள்

தமிழீழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களின் பெரும் செல்வமாக திகழ்ந்தது இத்தகைய பெருஞ்செல்வத்தைத்தான் இன்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களப் பேரினவாத காடையர்கள் தீயிட்டு சிதைத்து அழித்தனர்.

இன அழிப்பு நடவடிக்கை

இன அழிப்பு நடவடிக்கை

20-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவமும் ஒன்று. இத்தகைய அரிய நூலகம் எரிக்கப்பட்ட துயரத்தை நேரில் பார்த்த தாவீது அடிகளார் மாரடைப்பால் காலமானார்.

நூல்கள் எரிப்பு

நூல்கள் எரிப்பு

இந்த நூலக எரிப்பில், ஐசாக் தம்பையா என்பவர் அளித்த 6,000 நூல்கள் எரிந்து போயின. 1672-ல் பிலிப்பஸ் பால்டியாரின் டச்சு ஆட்சியில் இலங்கை, 1660-ல் கண்டி மன்னர் சிறைவைத்த ராபர்ட் நோக்ஸ் எழுதிய இலங்கை பற்றிய நூல்களும் அழிந்தன. 1585-ல் கத்தோலிக்க மதத்தின் தலைவர் எழுதிய நூல் ஒன்றும் எரிந்தது.

2003-ல் மீள் திறப்பு

2003-ல் மீள் திறப்பு

உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த நூலக எரிப்பு. இச்சம்பவம் தொடர்பாக ஏராளமான படைப்புகள், ஆவணப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 2003-ம் ஆண்டு இந்த நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள் உலகம் முழுவதும் தமிழர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட போது அங்கு முதன்மை நூலகராக இருந்தவர் ரூபி நடராஜன்.

ரூபா நடராஜன் புத்தகம்

ரூபா நடராஜன் புத்தகம்

அப்போது அதிர்ச்சியுடன் ரூபா நடராஜன் நூலக சிதைவுகளுக்கு இடையே அமர்ந்திருக்கும் காட்சி பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. அவர், யாழ்ப்பாண நூலக எரிப்பு தொடர்பாக எழுதி இருக்கும் நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது.

யாழ். நூலகத்தில்...

யாழ். நூலகத்தில்...

மேலும் யாழ்ப்பாண நூலகத்திலும் இன்று நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. நூலகத்துக்கு முன்பாக வாழை குத்திவைக்கப்பட்டு மண்சட்டியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்துடன் நூலகத்துக்குள் தாவீது அடிகளார் உள்ளிட்டோர் உருவபடங்களுக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடர் ஏற்றப்பட்டது.

English summary
Jaffna Public Library was set ablaze by Sri Lankan security forces and state-sponsored mobs on 31st May 1981.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X