For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிஷாவில் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த தனியார் பேருந்து: 12 பேர் பலி, 49 பேர் காயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒடிஷாவில் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த பேருந்து: 12 பேர் பலி-வீடியோ

    கட்டாக்: ஒடிஷாவில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து நீர் இல்லா ஆற்றில் விழுந்ததில் 12 பேர் பலியாகினர், 49 பேர் காயம் அடைந்தனர்.

    ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் தால்சர் பகுதிக்கு சென்றது. ஜகத்பூர் அருகே உள்ள பாலத்தில் சென்றபோது எருமை மாடு எதிரே வர டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் சுவரில் மோதி மகாநதி ஆற்றுப்படுக்கையில் விழுந்தது.

    Bus plunges into dry riverbed in Odisha: 12 killed, 49 injured

    30 அடி உயரத்தில் இருந்து பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர், 49 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். காயம் அடைந்த பயணிகள் எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் அதிகாரி பி.என். மஹாராணா கூறியதாவது, 12 சடலங்கள் வந்துள்ளன. அதில் 9 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். மருத்துவமனையில் 49 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

    பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    English summary
    12 people got killed and 49 injured after a private bus plunge 30 feet into the Mahanadi riverbed in Odisha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X