For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளின் திருமண பரிசாக 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்த தொழிலதிபர் !

மகளின் திருமண பரிசாக 90 ஏழைகளுக்கு மகாராஷ்டிர தொழிலதிபர் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்தை முன்னிட்டு வீடற்ற 90 ஏழைகளுக்கு 2 ஏக்கர் பரப்பளவில் நகரத்தை உருவாக்கி அதில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே லாசர் நகரில் ஆடை நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் அஜய் முனாத். இவரது மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை சிறப்பிக்க வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார். அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி செலவில் 90 வீடுகளை கட்டி ஏழைகளுக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

 A businessman gifting 90 houses to the homeless poor

வீடுகளை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக அவர் மூன்று தகுதிகளை குறிப்பிட்டு இருந்தார். தனிநபர் ஏழையாக இருக்கவேண்டும், குடிசையில் வசிப்பவராக இருக்கவேண்டும், போதைக்கு அடிமையாகாதவராக இருக்க வேண்டும் என்ற தகுதிகளை கொண்டு பயனாளர்களை தேர்வு செய்துள்ளார். முனாத் கட்டி தந்த வீட்டில் இதுவரை 40 குடும்பங்கள் குடியேறியுள்ளது.

இதுகுறித்து முனாத் மகள் ஸ்ரேயா கூறுகையில், இந்நடவடிக்கையை நான் பெரிதும் பாராட்டுகின்றேன், இதை என் திருமண பரிசாக நினைக்கின்றேன் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த ஐடியா என்று அஜய் முனாத் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ 500 கோடி செலவில் தடபுடலா திருமணம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A businessman from Aurangabad district of Maharashtra decided to celebrate his daughter’s wedding by gifting 90 houses to the homeless poor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X