For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் நந்தன் நிலகேனி?

By Mathi
Google Oneindia Tamil News

Buzz around Nandan Nilekani as PM's choice from Congress
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி விரும்பவில்லையெனில் 'ஆதார்' நந்தன் நிலகேனி அறிவிக்கப்படலாம் என்கின்றன காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தற்போதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக கருதப்படுகிறார். இருப்பினும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் அவர் இதை விரும்புவாரா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த பிரதமர் வேட்பாளர்பட்டியலில் ப.சிதம்பரம், ஏ.கே. ஆண்டனி, சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரது பெயர் எப்போதும் அடிபடும். தற்போதோ இவர்களைத் தாண்டி ஆதார் நந்தன் நிலகேனி கூட காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

நிலகேனி மறுப்பு

ஆனால் நிலகேனியோ இந்த கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறார். இருப்பினும் அவரை காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பல வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன காரணங்கள்?

கறைபடியாதவர், தொழில்துறை வல்லுநர், அரசாங்கத்துடன் சுமார் நான்கரை ஆண்டுகாலம் நிழலாக இயங்கியவர், ஆதார் அடையாள அட்டையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில் மாநிலங்கள், அமைச்சர்கள் என அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டவர்.

58 வயதுதான்..

பிரதமர் பதவிக்கு பொருத்தமான "இளம் வயது" என்று சொல்லும் வகையில் 58 வயதானவர்.

கெஜ்ரிவால் வகையறாக்களுக்கு வலை

நிலகேனியின் மனைவி ரோஹினி, என்.ஜி.ஓ.க்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். மாற்று அரசியலை விரும்பும் அர்விந்த் கெஜ்ரிவால் போன்றவர்களை ஆதரிக்கும் இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்த்துவிட முடியும் என்பது இன்னொரு கணக்கு.

English summary
The corridors of the capital are abuzz with speculation as to who might be Congress' candidate for Prime Minister — if a candidate should indeed be named before the 2014 Lok Sabha elections, and if Rahul Gandhi decides he doesn't wish to position himself for the job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X