For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிச.2021ல் முதல்முறையாக இந்தியர்கள் விண்ணில் பறப்பார்கள்.. அதுவும் சொந்த ராக்கெட்டில்.. இஸ்ரோ சிவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Timeline for Chandrayaan-2 | சந்திரயான்-2 தொடங்கிய நாள் முதல் இன்று வரை முழு தகவல்

    டெல்லி: முதல் இந்தியரை ஏந்திக் கொண்டு இந்தியாவின் முதல் விண்கலம் 2012ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

    நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்ட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 2021ம் ஆண்டு இந்த திட்டப்படி விண்வெளிக்கு மனிதர்களை இந்தியா அனுப்ப உள்ளது.

    By December 2021, the first Indian will be carried by our own rocket into space: says ISRO chief K Sivan

    இது தொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஐஐடியில் மாணவர்கள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "முதல்முதலில் மனிதர்களை விண்வெளிக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பும் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ஜுலை 21ம் தேதிக்குள் அடுத்த திட்டத்தினை செயல்படுத்த (ககன்யான்) நாங்கள் குறி வைத்திருக்கிறோம். 2021ம் ஆணடு டிசம்பர் மாதம் நமது சொந்த ராக்கெட்டில் ஏறி முதல் இந்தியர் விண்வெளி செல்வார். இதற்கான வேலைகளை இஸ்ரோ செய்து வருகிறது" என்றார். மேலும் இந்த பயணத்தின் கீழ் ஆள் இல்லதா விமானம் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்றார்.

    முன்னதாக இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டம் குறித்து வெளியிட்ட தகவலில், மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி - எம்.கே -111. ராக்கெட்டில் பறப்பார்கள் என்று தெரிவித்தது. இந்த ராக்கெட் தான் சந்திரயான்- 2 விண்கலத்தை கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்ப பயன்படுத்தப்பட்டது.

    English summary
    ISRO chief K Sivan said, India's first manned space flight by December 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X