For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணிக்கு 289, காங்கிரஸ் கூட்டணிக்கு 101 மட்டுமே: சிவோட்டர் எக்ஸிட் போல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் என்.டபிள்யு.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

என்.டபிள்யு.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் நிறுவனங்கள் நாட்டில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தியது.

வாக்காளர்களின் வாக்கு

வாக்காளர்களின் வாக்கு

இந்த தொகுதிகளில் மொத்தம் 1,66,901 வாக்காளர்களிடம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

543 தொகுதிகளில்

543 தொகுதிகளில்

நாட்டின் முக்கிய போட்டி களங்களாக கருதப்படும் ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, பிகார் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு

காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு

அதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாஜக தலைமையில் ஆட்சி

பாஜக தலைமையில் ஆட்சி

சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக்கு 101

காங்கிரஸ் கூட்டணிக்கு 101

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 101 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 153 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

 பாஜகவிற்கு 249இடங்கள்

பாஜகவிற்கு 249இடங்கள்

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 249 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 78தான்

காங்கிரஸ் கட்சிக்கு 78தான்

காங்கிரஸ் கட்சி ஒட்டு மொத்தமாக 78 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 53 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது

ஆம் ஆத்மிக்கு 5

ஆம் ஆத்மிக்கு 5

மற்ற கட்சிகள் 153 இடங்களில் வெற்றி பெறும் என்றும் இதில் 5 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என்று சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக 27

அதிமுக 27

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 27 இடங்களை கைப்பற்றும் என்று சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தேமுதிக, பாமக, மதிமுக

தேமுதிக, பாமக, மதிமுக

பாரதிய ஜனதா கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களையும் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

திமுக கூட்டணிக்கு 6

திமுக கூட்டணிக்கு 6

திமுக 6 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று தெரிவிக்கிறது.

காங்கிரஸ் எம்.பி யார்?

காங்கிரஸ் எம்.பி யார்?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

கேரளா

கேரளா

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களையும், இடதுசாரிகள் 9 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி நிலவரம்

டெல்லி நிலவரம்

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்று கூறுகிறது இந்தக் கருத்துக்கணிப்பு.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களும், பாஜக கூட்டணி 31 இடங்களும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1 இடத்தையும், பிற கட்சிகள் 2 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்

உபி மாநிலத்தில் பாஜக கூட்டணி மொத்தம் 54 இடங்களை வெல்லுமாம். காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களும், சமாஜ்வாதி கட்சிக்கு 11 இடங்களும், பாகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு 8 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இடதுசாரிகளுக்கு 9 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும், பாஜகவிற்கு 2 இடங்களும் வெல்லும் வாய்ப்புள்ளதாக சிவோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

English summary
As the 16th Lok Sabha elections 2014 came to an end on Monday, C-Voter conducted a post-poll survey clearly indicating that NDA will win 289 parliamentary seats, besides grabbing all Delhi seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X