For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற நார்வே சுற்றுலா பயணி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

Google Oneindia Tamil News

கொச்சி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற நார்வே சுற்றுலா பயணியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜெர்மன் மாணவர் ஜேக்கப்பை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.

CAA Protest: Norwegian tourist asked to leave Country

இதனையடுத்து அந்த மாணவரும் ஜெர்மன் நாட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில் தற்போது நார்வே சுற்றுலா பயணி ஜான்னி-மெட்டீ-ஜோஹன்சன் என்பவரையும் நாட்டை விட்டு வெளியேற குடியேற்றத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கேரளாவுக்கு சுற்றுலா பயணம் வந்த அவர், கொச்சியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றார். இதனையடுத்து குடியேற்றத் துறை அதிகாரிகள், ஜான்னி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... அன்புமணி உறுதிபா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... அன்புமணி உறுதி

இதன் பின்னர் அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; இல்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர். இதனையடுத்து அவர் சொந்த நாட்டுக்கு திரும்புகிறார்.

English summary
Norwegian tourist Janne-Mette Johansson was asked to leave India for her participation of Anti CAA Protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X