For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அமைச்சரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அமைச்சரவையில் இன்று புதிதாக பதவியேற்றுக் கொண்ட சாத்வி நிரஞ்சன் ஜோதியையும் சேர்த்து மொத்தம் 8 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

Cabinet reshuffle: Women representation in Modi ministry goes upto 8

பிரதமர் மோடி இன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். 4 கேபினட் மற்றும் 17 இணை அமைச்சர்கள் என மொத்தம் 21 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இன்று பதவியேற்றுக் கொண்டவர்களில் உத்தர பிரதேச மாநிலம் பத்தேஹ்பூர் தொகுதி எம்.பி.யும், மதபோதகருமான சாத்வி நிரஞ்சன் சாத்வி மட்டும் தான் பெண் ஆவார்.

சாத்வி பதவிப் பிரமாணத்தை தவறாக வாசித்தபோது அவரை இடைமறித்து அவரது தவறை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருத்தினார். சாத்வியையும் சேர்த்து மோடி அமைச்சரவையில் மொத்தம் 8 பெண்கள் உள்ளனர்.

கடந்த மே மாதம் சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, ஹர்சிம்ரத் கவ்ர் பாதல், ஸ்மிருதி இரானி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், நிர்மலா சீத்தாராமன் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மோடி அமைச்சரவையில் உள்ள மூத்த பெண் உறுப்பினர் நஜ்மா, இளம் உறுப்பினர் ஸ்மிருதி இரானி.

English summary
Modi's cabinet has 8 women ministers including UP MP Sadhvi Niranjan Jyoti who took oath today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X