For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்மோகன் சிங் சொதப்பிய திட்டங்கள் எவை.. எவை?: அதிகாரிகளை வேலை வாங்க ஆரம்பித்த மோடி!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் முடங்கிப்போன திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்துள்ளதால் அதை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பாஜக தலைமையிலான அரசு இன்னும் பொறுப்பேற்காத நிலையிலும், காலத்தை விரையம் செய்ய நரேந்திரமோடி விரும்பலில்லை என்று தெரிகிறது. பிரதமரானதும் அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள மோடி, அதற்கான கோரிக்கையை இப்போதே அமைச்சரவை செயலாளருக்கு விடுத்துள்ளார்.

Cabinet secretariat asks government departments to prepare presentations for the new PM

இதையடுத்து அமைச்சரவை செயலாளரும் அனைத்து அமைச்சக துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் முடக்கப்பட்ட திட்டங்களை பற்றிய விவரங்கள், அந்த திட்டங்கள் முடங்க என்ன காரணம் என்பது போன்ற விவரங்களை அறிக்கையாக தயாரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஒவ்வொறு அமைச்சக அதிகாரிகளும், 'பவர் பாயிண்ட் பிரசன்டேசன்' தயார் செய்து வைத்திருக்க வேண்டும், 10 முதல் 12 'ஸ்லைடு'களாவது போடப்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பபட்டுள்ளது.

எந்த மாதிரியான நடவடிக்கைகளை பழைய அரசு தவிர்த்திருக்கலாம் என்பதை அதிகாரிகள் வெளியிடுவதன் மூலமாக, அதுபோன்ற நடவடிக்கைகளை புதிய அசு தவிர்க்க வசதியாக இருக்கும் என்று மோடி கருதுகிறார். தடைகளுக்கான காரணத்தை புரிந்து கொண்டால் அடுத்ததாக செயலாற்ற திட்டம் கிடைக்கும் என்பது மோடியின் நோக்கமா உள்ளது.

English summary
While you would expect secretaries in various departments to be readying a five-year roadmap for the new government, this time key ministries are busy identifying decisions "that shouldn't have been taken" by the outgoing UPA regime in what many see as the first step towards reversing them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X