• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மம்தா பானர்ஜிக்கு நீதிபதி ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது எப்படி இருக்கு தெரியுமா? மஹுவா காட்டம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ள உத்தரவு அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு வழிகோலியுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தல் முடிவு குறித்து சந்தேகம் இருப்பதாக மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கவுசிக் சந்தா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

இந்த மன் கீ பாத்லாம் வேண்டாம்.. பேசாமல் பெட்ரோல் கீ பாத் நடத்தலாம்.. பிரதமரை விமர்சித்த மம்தா இந்த மன் கீ பாத்லாம் வேண்டாம்.. பேசாமல் பெட்ரோல் கீ பாத் நடத்தலாம்.. பிரதமரை விமர்சித்த மம்தா

மம்தா எதிர்ப்பு

மம்தா எதிர்ப்பு

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, முதல்வர் மம்தா கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் நீதிபதி சந்தா, பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். 2015ல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படும் வரை, நீதிபதி சந்தா, பா.ஜ.க உறுப்பினராக இருந்தவர். அவர் இந்த வழக்கை விசாரித்தால், இதன் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருக்கும். எனவே இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

விலகிய நீதிபதி

விலகிய நீதிபதி

இதையடுத்து, இந்த வழக்கில் இருந்து விலகுவதாக, நீதிபதி கவுசிக் சந்தா நேற்று அறிவித்தார். என் மீது, ஒருதலைப்பட்சமாக செயல்படுவேன் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நான் நீதிபதியாக பதவியேற்கும்போது, விருப்பு வெறுப்பு இன்றி, என் கடமையை முறையாக செய்வேன் என உறுதிமொழி ஏற்றுதான் பதவிக்கு வந்தேன்.

ரூ.5 லட்சம் அபராதம்

ரூ.5 லட்சம் அபராதம்

இந்த வழக்கை விசாரிக்க எனக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை. அதேபோல், இதை விசாரிக்க எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. ஆனால், என்னால் சர்ச்சைகள் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விலகுகிறேன். ஆனால் நீதித்துறையை தவறாக சித்தரித்து நீதிபதி குறித்து, அவதுாறான கருத்துகளை தெரிவித்த மனுதாரர் மம்தா பானர்ஜிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை அவர் இரண்டு வாரங்களுக்குள், மாநில பார் கவுன்சிலிடம் டெபாசிட் செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

தெரிந்தே செய்துவிட்டார்

தெரிந்தே செய்துவிட்டார்

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் லோக்சபா எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது டுவிட்டர் பதிவில் கருத்து கூறியுள்ளார். ஒரு வழக்கறிஞராக சந்தா இதற்கு முன்பு, பாஜக சார்பில் எந்தெந்த வழக்குகளில் ஆஜரானார் என்பதை அவர் பட்டியலிட்டுள்ளார். மேலும், எரிச்சல் உணர்வு அதன் உச்சத்தை இன்று அடைந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பதை தவிர நீதிபதிக்கு வேறு வழியில்லை என்று தெரிந்தபிறகும், 5 லட்சம் அபராதம் விதித்துள்ளார். தன்னால் முடியும் என்பதற்காக இதைச் செய்துள்ளார். மாணவன் சரியாகத்தான் இருக்கிறார் என்று தெரிந்தும், ஆசிரியர், கரும் பலகையை உடைப்பதை போல இருக்கிறது இந்த சம்பவம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக ரியாக்ஷன்

பாஜக ரியாக்ஷன்

அதேநேரம், பாஜக ஐடி விங் தலைவர், அமித் மால்வியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நீதித்துறையின் மாண்பை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்ட மம்தா பானர்ஜிக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதம், மிகக் குறைவான அளவு தொகை என்று கூறியுள்ளார்.

English summary
Trinamool Lok Sabha MP Mahua Moitra, whose tweet listing the cases Justice Chanda had appeared for the BJP as a lawyer was mentioned in Justice Chanda's order, tweeted: "Petulance at its best today. Realising no way out but to recuse himself he decides to slap Rs 5lakh fine simply because he can. Kind of like teacher realises student is correct & breaks blackboard."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X