For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு கவுன்சிலரை கூட உங்களால் இழுக்க முடியாது.. கலங்கடித்த பிரதமர் மோடிக்கு திரிணமூல் கலக்கல் பதில்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: 40 எம்எல்ஏக்கள் என்ன, ஒரு கவுன்சிலரை கூட உங்களால் இழுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரிணமூல் கட்சி பதில் அளித்துள்ளது.

மேற்கு வங்க தேர்தலையொட்டி சேராம்பூரில் பாஜக சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வர போகின்றன. எங்கும் தாமரை மலர போகிறது.

மிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு! மிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு!

தேர்தல் முடிவு

தேர்தல் முடிவு

உங்கள் எம்எல்ஏக்கள் உங்களை விட்டு விலக போகிறார்கள். இப்போதும் கூட உங்கள் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் பாஜகவில் இணைவார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

மம்தாவுக்கு டெல்லி வெகுதூரத்தில் உள்ளது. எனவே அவரது பிரதமர் கனவு பலிக்காது. தேர்தல் நேரத்தில் என்னை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை நெருங்கும் சமயத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விமர்சிக்கத் தொடங்கி விடுகிறார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

கவுன்சிலர்

கவுன்சிலர்

இதுகுறித்து செய்தியாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் எம்பியுமான டெரிக் ஓ பிரையன் கூறுகையில் பாஜக அழியும் காலம் நெருங்கிவிட்டது. திரிணமூல் கட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலரை கூட பாஜகவால் இழுக்க முடியாது.

புகார் அளிக்க

புகார் அளிக்க

பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைக்கு வந்தாரா, அல்லது குதிரை பேரம் நடத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வந்தாரா என தெரியவில்லை. ஆட்சி அமைக்க பிரதமர் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க போகிறோம் என்றார் பிரையன்.

English summary
TMC’s senior leader in the Rajya Sabha and spokesperson Derek O’Brien said the party would complain to the Election Commission that Prime Minister Narendra Modi was indulging in horse trading.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X