For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான்.. பதிலடி தராத இந்தியா.. காரணம் என்ன தெரியுமா? #uriattack

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.

பதிலடி தாக்குதலுக்கு, தயாராகும்படி இந்தியாவுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவதிலும், அதில் வெற்றி பெறுவதிலும், இந்திய ராணுவத்திற்கு எந்த திறமை குறைபாடும் கிடையாது. அதை வெற்றிகரமாக நடத்தும் வல்லமை சிறப்பு படைக்கு உள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு என்பதை மறுக்க முடியாது. முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்க தயங்காத நாடு என்பதும் காரணம்.

பாகிஸ்தானுக்கு தெரியும்

பாகிஸ்தானுக்கு தெரியும்

இந்தியா திருப்பி தாக்காது என்ற தைரியத்தில்தான் மும்பை, பதன்கோட் போன்ற பகுதிகளில் பாக். தனது தீவிரவாதிகளை கொண்டு, எளிதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், அந்த நாட்டை தாக்க முடியாததற்கு, அந்த நாட்டின் அணு ஆயுத பலம் ஒரு முக்கிய காரணம்.

மின்யான்மரில் பதிலடி

மின்யான்மரில் பதிலடி

ஆனால், இப்படியே பதிலடி தராமல்விட்டாலும், பாகிஸ்தான் அடங்காது. மணிப்பூரில் இந்திய ராணு வீரர்கள் கொல்லப்பட்டபோது மியான்மர் எல்லைக்குள் புகுந்து சென்று தீவிரவாதிகளை கொன்று ஒழித்த திறமையுள்ளதுதான் இந்திய ராணுவம். பாகிஸ்தானில் அதுபோன்ற தாக்குதலை நடத்த தவிர்ப்பதற்கு அணு ஆயுதம் முக்கிய காரணம்.

சீனா ஆதரவு

சீனா ஆதரவு

அணு ஆயுத பிரச்சினையோடு, சீனாவின் ஆதரவும் முக்கிய காரணம். சீனாவும் அணு ஆயுத நாடு என்பது இதில் கவனிக்கத்தக்கது. மேலும் இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆசிய நாடுகளில் சீனாவை விஞ்சக்கூடிய வல்லமை இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.

பொருளாதாரம் முக்கியம்

பொருளாதாரம் முக்கியம்

இந்த சூழ்நிலையில், தாக்குதல் தவறாகி போனால், சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைக்கு நாம் உள்ளாக நேரிட்டால் அது மிகப்பெரிய அடியாக அமைந்துவிடும். பாகிஸ்தானுக்கு இழக்க எதுவுமே கிடையாது. ஆனால் இந்தியாவுக்கு இழக்க அதிகம் உள்ளது. இதுவும் பதிலடி தாக்குதலை நடத்தாமல் இருக்க முக்கிய காரணம்.

English summary
Pakistan cannot go unpunished for the horrific attack its actors carried out Uri in Jammu and Kashmir on Sunday in which 17 soldiers were martyred and four terrorists killed. As India weighs its options, there is also the though on the mind of the officials and that is Pakistan is a nuclear state which adocates the first use policy. Officials in India say that there is an urgent need to strike. The reason Pakistan continues to launch its actors on Indian soil is because they have come to believe that they will never be hit. Be it the 26/11 or Pathankot attacks, India has never had a military response to Pakistan despite the role of the country being so clear in both those incidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X