For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்லட்டில் கூலாக ஊர் சுற்றும் கேப்டன் டோணி...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஆஸ்திரேலியாவில் சிலமாத காலம் சுற்றுப்பயணம் செய்து பிஸியாக இருந்த கேப்டன் டோணி... தற்போது தனது சொந்த ஊரில் கூலாக புல்லட் சவாரி செய்து வருகிறார்.

கிரிக்கெட் விளையாட போகும் இடமெங்கும் பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ செல்லும் டோணிக்கு சொந்த ஊர் வந்தாலே ஜாலிதான். உடனே தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்.

இப்போதும் அப்படித்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ள டோணி தன்னுடைய பிரியமான புல்லட்டில் எந்தவித பாதுகாப்பு துணையும் இன்றி வலம் வருகிறார்.

பைக் வெறியர் டோணி

பைக் வெறியர் டோணி

இந்திய கிரிக்கெட் அணியின், "கூல்' கேப்டன், மகேந்திர சிங் தோனி, ஒரு பைக் பிரியர் என்பது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அவரிடம், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, உயர் ரக பைக்குகள் ஏராளமாக உள்ளன.

பல லட்சம் ரூபாய் பைக்

பல லட்சம் ரூபாய் பைக்

தற்போதைய நிலவரப்படி, ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும், 16 பைக்குகள் உள்ளனவாம்.

போகும் இடமெல்லாம் பைக்

போகும் இடமெல்லாம் பைக்

இதுதவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக பயணிப்பதற்காக, அந்த நகரங்களிலும், தலா இரண்டு பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முதல் பைக்

முதல் பைக்

தன்னிடம், விலையுயர்ந்த பல பைக்குகள் இருந்தாலும், முதல் முதலாக, வாங்கிய பைக் மீது தான், அவருக்கு ரொம்பவும் ஆசையாம். அதனை அவ்வப்போது ஓட்டிப் பார்த்து மகிழ்வாராம் டோணி.

ஐ.பி.எல்க்கு தயார்

ஐ.பி.எல்க்கு தயார்

நாளை மறுதினம் (8 ஆம் தேதி) முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணப்பட உள்ள டோணி, அதற்கு முன்னர் ஆசையாக தனது சொந்த ஊரில் புல்லட்டில் ஜாலியாக வலம் வந்துள்ளார் என்கின்றனர் அவரது நண்பர்கள்.

English summary
After winning seven straight matches in World Cup 2015, Team India captain Mahendra Singh Dhoni was on Monday seen in his captain cool avatar riding bike on the streets of Ranchi without any security cover around him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X