For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார், உதவிய மாமியார் மீது பலாத்கார வழக்கு! கர்ப்பத்தை கலைக்க போராட்டம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தின் சப்பார் என்ற கிராமத்தை சேர்ந்தவ 26 வயது பெண், மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது மாமனார் சாஜித் (48) தன்னை பலாத்காரம் செய்ததாகவும், இதனால் தான் தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த கர்ப்பத்தை கலைக்க கோர்ட் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தனது மாமியார் நயீமாவும் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் மனுவில் அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய கோர்ட் மாமனார், மாமியார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார், பலாத்காரம், குற்றச்செயல், சதி போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மனுதாரரின் வாக்கு மூலம் கோர்ட்டில் நாளை பதிவு செய்யப்பட உள்ளது. அப்போதுதான், சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து அந்த பெண்மணி விளக்கமாக தெரிவிக்க உள்ளார். இதனிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டை சஜித் மற்றும் நயீமா ஆகியோர் மறுத்துள்ளனர்.

சொத்து தகராறு காரணமாக மருமகள் தங்கள் மீது இப்படி வீண் பழி சுமத்திவிட்டதாக அவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

English summary
A case has been registered against a 48-year-old man for allegedly raping her daughter-in-law, following which she became pregnant. In her complaint, the 26-year-old woman has alleged that she was raped and threatened by her father-in-law, identified as Sajid, in July 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X