For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முக்கிய வழக்குகளின் விசாரணைகளை "லைவ்" பண்ணலாம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளின் விசாரணைகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளின் விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து வழக்குகளையும் நேரலை செய்ய வேண்டும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது.

    cases will be on live? Supreme court today judgement

    வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணைகளும் முடிந்த நிலையில் தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

    [ஆஹா.. சிம் வாங்க இனிமே ஆதார் எண் தேவையில்லப்பா.. சுப்ரீம் கோர்ட் ஹேப்பி நியூஸ்! ]

    அதன்படி நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வழக்கு விசாரணையை ஒளிபரப்ப போதுமான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நீதித்துறையின் பொறுப்புணர்வை அதிகரிக்க வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வது உதவும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    English summary
    The Supreme Court gives judgement on the case of that all cases in the courts are required to be made live.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X