For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல் ஏடிஎம்களில் ரூ.4500 எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாளை முதல் ஏடிஎம் எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: நாளை முதல் ஏடிஎம் எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

Cash withdrawal limit from ATMs increased

இந்நிலையில் நாளை முதல் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்த உச்சவரம்பு தற்போது 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

English summary
cash withdrawal limit from ATMs was increased from Rs 2,500 to Rs 4,500 effective January 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X