For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுளில் இன்று டிரெண்டாகி பட்டையக் கிளப்பும் “கேட்(CAT) 2015 முடிவுகள்” டேக்!

Google Oneindia Tamil News

டெல்லி: 2015 ஆம் ஆண்டிற்கான "பொது நுழைவுத் தேர்வு" எனப்படும் கேட் (CAT) நுழைவுத் தேர்விற்கான ரிசல்ட் இன்று வெளியான நிலையில் "CAT 2015 result" என்னும் ஹேஷ் டேக் கூகுளில் டிரெண்டாகி வருகின்றது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் தனது பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க காமன் அட்மிஷன் டெஸ்ட்டை நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம் பிரிவுகளில் 2,700 இடங்களுக்கு, மாணவர்களை சேர்க்க இந்த தேர்வை நடத்துகிறது. மேலும் 165 கல்வி நிலையங்களும் தங்களது மாணவர் சேர்க்கைக்கு இந்த கேட் தேர்வு முடிவையே ஏற்றுக் கொள்கிறது.

கம்ப்யூட்டர் அடிப்படையில் இரண்டரை மணி நேரம் நடத்தப்படும் தேர்வாகும் இது. டேட்டா இன்டர்பிரிடேஷன் அன்ட் லாஜிகல் ரீசனிங், குவான்டிடேட்டிவ் எபிலிட்டி, வெர்பல் எபிலிட்டி மற்றும் காம்பிரிஹென்சன் ஆகிய பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டியது அவசியம். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி கட் ஆப் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 அல்லது 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகடிவ் மதிப்பெண் உண்டு.

இந்நிலையில், கேட் 2015 முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த ஹேஷ் டேக் பெருமளவில் ஜார்க்கண்ட்டில் உள்ள மாணவர்களால் தேடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஹரியானா, சட்டீஸ்கர், ரூர்க்கி, துர்க்காப்பூர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

English summary
The results of the Common Admission Test (CAT) 2015 were released on its official website today, following which 'CAT 2015 result' became the most trending search of the day, according to Google Trends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X