For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் உயிரை பணயம் வைத்து தாறுமாறாக கார் ஓட்டிய விஜயவாடா எம்.எல்.ஏ. மகன்

By Siva
Google Oneindia Tamil News

விஜயவாடா: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. போண்டா உமா மகேஸ்வர ராவின் மகன் ரவி தேஜா தனது பிறந்தநாள் அன்று போக்குவரத்து விதிகளை மீறி காரில் வேகமாக சென்று பலரையும் பீதியடைய வைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா தொகுதி எம்.எல்.ஏ. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த போண்டா உமா மகேஸ்வர ராவ். அவரின் மகன் ரவிதேஜா. ரவி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அன்று அவர் வெள்ளை நிற டொயோட்டா பார்ச்சூனரை அதிவேகத்தில் ஓட்ட அதன் பக்கங்களில் அவரது ஆதரவாளர்கள் தொங்கிக் கொண்டு சென்றனர். ரவியின் காரை அவரது நண்பர்கள் சக்திவாய்ந்த இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறி மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ரவியும், அவரது நண்பர்களும் வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதை பலரும் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இது குறித்து ரவியின் தந்தையிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

குழந்தைகள் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

ரவியின் கார் உள்பட அவருடன் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விஜயவாடா போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக ராவின் மூத்த மகன் விஜயவாடா-குண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் ரேஸ் சென்றபோது அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijawada MLA's son Ravi Teja had a fast and furious party on the busy roads of Vijayawada on his birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X