For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் கலப்பது பெங்களூர் கழிவுகள்.. உச்ச நீதிமன்றத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஷாக் தகவல்

காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக எல்லையில் தான் காவிரியில் கழிவு கலக்க வாய்ப்புள்ளது- மத்திய அரசு- வீடியோ

    பெங்களூர்: காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படும் போது அதில் கழிவு நீர் கலந்து தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்தனர். தமிழக அரசும் இதில் கர்நாடக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தது. இந்த நிலையில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு எதிராக இந்த சம்பவத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.

    Cauvery Die Water Case: Center takes stand on Karnataka, says no problem in the source of the water

    உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து இதற்கு முன்பே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. முதற்கட்ட அறிக்கையில் கர்நாடகா இது தவறு எதுவும் இல்லை என்பது போலவே அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது.

    அதில், காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை. கர்நாடக பகுதியில் காவிரியில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை. காவிரி நீர் செல்லும் இடங்களில்தான் கழிவு நீர் கலக்கப்படுகிறது என்றுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதில் தமிழக அரசு மீது மறைமுகமாக குற்றச்சாட்டு வைத்துள்ளது.

    தமிழக எல்லையில்தான் மாசு கலக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

    English summary
    Cauvery Die Water Case: Center takes stand on Karnataka, says no problem in the source of the water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X