For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி வழக்கை நடுவர் மன்றத்துக்கு திருப்பி அனுப்பமாட்டோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி

காவிரி வழக்கை நடுவர் மன்றத்திற்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட் உறுதி அளித்துள்ளது. இந்த வழக்கை அடுத்த மாதம் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி தொடர்பான வழக்கு நடுவர் மன்றத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி அளித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது, 67 சதவீதம் வறட்சி தமிழகத்தில் நிலவி வருவதாக தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினாடிக்கு 2000 கன அடி நீரை மறு உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Cauvery dispute case will not be sent back to Cauvery tribunal says Supreme Court

மேலும், பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியது. வழக்கில் சம்மந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் உரிய விளக்கங்களை தயாரித்து 3 வாரத்தில் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு மீண்டும் நடுவர் மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட மாட்டாது என்று காவிரி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உறுதி அளித்துள்ளது.

English summary
Cauvery dispute case will not be sent back to Cauvery tribunal said Supreme Court bench today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X