For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரு கலவரம்.. படம் பிடித்த பெண் நிருபரின் வயிற்றில் குத்திய வன்முறையாளர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தின் போது வன்முறையை படம்பிடித்த பெண் டிவி நிருபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக பெங்களூருவில் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் விபரீத நிலையை எட்டியுள்ளன. தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களும், தமிழர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. இதனால், பெங்களூரு முழுவதும் பதற்ற நிலை உண்டாகியுள்ளது.

Cauvery violence: Woman TV journalist beaten up in Bengaluru

உச்ச நீதிமன்ற தீா்ப்பைத் தொடர்ந்து கா்நாடகாவில் தமிழா்களின் கடைகள் மற்றும் லாாிகளைக் கன்னட அமைப்பினா் தாக்குவதால் பெங்களூரூ நகா் முழுவதும் போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி தமிழகத்திற்கு காவிாியில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் கா்நாடகாவில் கன்னட அமைப்பினா் எதிா்ப்பு தொிவித்து தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கன்னட நடிகையின் வலைதள பதிவுக்கு கா்நாடக வாழ் தமிழ் இளைஞா் ஒருவா் எதிர்ப்பு தொிவித்து கருத்து பதிவிட்டதால், கன்னட அமைப்பினரால் அந்த இளைஞர் தாக்கப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னையில் கா்நாடகாவைச் சோ்ந்தவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில், கா்நாடக அரசு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோா்கொண்ட அமா்வின் தீா்ப்பில், தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடிக்கு பதிலாக 12 ஆயிரம் கன அடி நீரை கா்நாடக அரசு வரும் 20-ம் தேதி வரை தொடா்ந்து வழங்க வேண்டும் எனவும், இந்த வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தொிவித்திருந்தனா்.

இதனால் ஆவேசமடைந்த கன்னட அமைப்பினா் பெங்களூரூ நகாில் உள்ள தமிழா்களின் கடைகளை அடித்து நொறுக்கினா். மேலும், தமிழக பதிவெண் கொண்ட லாாிகளையும் தாக்கி தீ வைத்து எரித்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, தகவலறிந்த கன்னட அமைப்பினர் பெங்களூரூ நகரில் உள்ள கோபாலன் வணிக வாளகத்தின் அருகே கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தை ரோகினி மற்றும் மது என்ற பெண் பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோகினியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் மது தெரிவிக்கையில், பெங்களூரூ நகரில் உள்ள கோபாலன் வணிக வாளகத்தின் அருகே நடந்த கலவரத்தை வீடியோ எடுத்து கொண்டிருந்தோம். கலவரக்காரர்கள் வீடியோ எடுக்கக்கூடாது என மிரட்டினர். ஆனால் நாங்கள் எங்கள் பணியை செய்தோம்.

இதனால் ஆத்திரமடைந்த கலவரக்காரர்கள் ரோகினியிடமிருந்த காமிராவை பறித்தனர். மேலும் ரோகினியின் வயிற்றில் தாக்கினர். இதனால் ரோகினி வலி தங்க முடியாமல் அலறினார். அவரை அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில், பெங்களூரூ நகரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க நகா் முழுவதும் அதிகப்படியான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனா்.
இன்றும் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு அஞ்சி வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
A woman television journalist and her cameraman were assaulted during violence that broke out in various parts of the city after the Supreme Court's modified order directing Karnataka to release reduced quantum of 12,000 cusecs of Cauvery river water to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X