For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான கொள்முதலில் ஊழல்.. விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: 75 பயிற்சி விமானங்களை வாங்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பெயர் தெரியாத இந்திய விமானப் படை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சரக அதிகாரிகள், ஆயுத தரகர் சஞ்சய் பந்தாரி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

விமானப் படையில் சேரும் புதிய அதிகாரிகளின் பயிற்சிக்காக பயிற்சி விமானங்கள் வாங்கப்படுகின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள எச்டிபி 32 விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கின. இதையடுத்து பைலடஸ் பிசி 7 எம்கே 2 வகை விமானங்களை வாங்க விமான படை முடிவு செய்தது.

CBI files case against IAF officials, swiss firm over bribe

இதையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது பைலடஸ் விமான நிறுவனத்திடம் ரூ. 2,896 கோடி மதிப்பிலான 75 பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

விமானங்களை வாங்கியதில் முறைக்டு நடந்துள்ளதாகவும் ரூ 339 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்தவிவகாரத்தில் சுவிட்சர்நாந்தை சேர்ந்த பைலடஸ் விமான நிறுவனம் மற்றும் சஞ்சய் பந்தாரியின் ஆப்செட் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து டெல்லியில் உள்ள சஞ்சய் பந்தாரியினஅ வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது.இந்த சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Central Bureau of Investigation has filed a case against unknown officials of the Air Force, the Defence Ministry, arms dealer Sanjay Bhandari and officials of Swiss-based plane-maker Pilatus Aircraft Ltd over alleged irregularities in procurement of 75 basic trainer aircraft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X