For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேசிப் பொழுதைக் கழிக்க 4 "பிசி".. பசிச்சா சாப்பிட பர்கர்... நல்லா வாழ்றாருப்பா சோட்டா ராஜன்!

Google Oneindia Tamil News

டெல்லி: சாதா கிரிமினலுக்கும் விஐபி கிரிமினலுக்கும் இடையே 6 அல்ல 60 வித்தியாசங்களை இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும். சோட்டா ராஜன் அதற்கு சரியான உதாரணம்.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனுக்கு சிறப்பு கவனிப்பு கொடுக்கப்படுகிறதாம். விசாரணையில் அல்ல.. சாப்பாடு உள்ளிட்டவற்றில்.

CBI gives royal treatment to Chota Rajan

அவருக்கு தரப்பட்டுள்ள வசதிகளைக் கேட்டால் நாமும் சோட்டா ராஜன் போல மாறி விடலாம் போலிருக்கே என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். அப்படி ஒரு கவனிப்பில் இருக்கிறார் சோட்டா ராஜன்.

  • சோட்டா ராஜன் தங்க வைக்கப்பட்டுள்ளது ஏசி அறையில்.
  • 20 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இந்த அறையில் புளோர்மேட் விரிக்கப்பட்டு விஐபி ரேஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • அறையை சுற்றி, ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் உள்ளன.
  • வெடிகுண்டு நிபுணர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • சோட்டா ராஜன் சாப்பிடுவது எல்லாமே வெளிநாட்டு உணவுகள்தானாம். நம்ம ஊர் சாப்பாடு வாயில் இறங்குவதில்லையாம்.
  • பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டுக்கு ஓடி விட்ட சோட்டா ராஜன், இந்திய உணவு வகைகளை மறந்து விட்டாராம்.
  • சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் சோட்டாராஜன் வாழ்ந்ததால், அந்த நாடுகளின் உணவுதான் பிடிக்கிறதாம்.
  • பச்சை கீரை வகைகள், பர்கர், சீஸ் சாண்ட்விச், கார்ன்பிளேக் இவற்றுடன் வேக வைத்த முட்டைகள் அவருக்கு உணவாக வழங்கப்படுகிறது.
  • வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி கூட்டு மட்டுமே அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சோட்டா ராஜனுடன் பேசிக் கொண்டிருப்பதற்காகவே நான்கு போலீஸாரையும் போட்டு வைத்துள்ளனராம்.
English summary
Don Chota Rajan is getting royal treatment from the CBI in its Delhi HQ.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X