For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு.. ஆர்பிஐ மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு குறித்து ஆர்பிஐ மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Google Oneindia Tamil News

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு குறித்து ஆர்பிஐ மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.

CBI inquires RBI higher officials on the Nirav Modis PNB scam

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்நிலையில் நீரவ் மோடி நிறுவனத்தில் பணிபுரிந்த மேலாளர் மட்ட ஊழியர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நீரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயர் அதிகாரிகள் பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.

இந்நிலையில் நீரவ் மோடி மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்தப்படுபவர்களில் ஒருவர் தலைமை பொது மேலாளர் அந்தஸ்தில் உள்ளவர் ஆவர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேட்டை தடுக்காதது ஏன் என சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
CBI officials inquires RBI higher officials on the Nirav Modi's PNB scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X