For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்: யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.1,394 கோடி கட்டுமான நிறுவனம் மோசடி

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொட்டம் இன்ஃபராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் 8 வங்கிகளில் 1,394 கோடி வாங்கி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.1,394 கோடி மோசடி- வீடியோ

    ஹைதராபாத்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்பட 8 வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1,394 கோடி முறைகேடு செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

    சென்னையை சேர்ந்த கனிஷ்க் நகைக்கடை அதிபர், எஸ்பிஐ வங்கியில் 824 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பது புதன்கிழமை அம்பலமானது. இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக,
    ஹைதராபாத்தில் உள்ள தொட்டம் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.1,394 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது

    CBI investigates Rs 1394.43 crore Hyderabad bank fraud

    இந்நிறுவனம் சாலைகள், தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி உட்பட பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக சலாலித், அவரது மனைவி கவிதா ஆகியோர் உள்ளனர்.

    இவர்கள் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் மட்டும் 303.84 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ.யிடம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா புகார் அளித்துள்ளது. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த நிறுவனத்தின் தலைவர் சாலலித் தொட்டம்புடி, அவரது மனைவி கவிதா தொட்டம்புடி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

    இந்த மோசடி தொடர்பாக ஹைதராபாத்தில் தொட்டம் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், இதன் உரிமையாளர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

    அப்போது, இந்நிறுவனம் மேலும் 7 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது தெரிந்தது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா உட்பட 8 வங்கிகளில் தொட்டம் நிறுவனம் கடன் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை 1,394.43 கோடி இந்த கணக்கு கடந்த 2012ல் வராக் கடனாக மாறியுள்ளது.

    வங்கியில் கடன் வாங்கிய பணம் எல்லாம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, மிகைப்படுத்திய செலவு கணக்கு காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

    நீரவ் மோடி தொடங்கி நாடு முழுவதும் தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    The Central Bureau of Investigation (CBI) has registered a case based on a complaint filed by Union Bank of India against Hyderabad-based Totem Infrastructure, alleging it was cheated to the tune of Rs 303.84 crore by the company.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X