For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார், மீது சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கின் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக புகார் எழுந்து இருப்பதால், அவரை வெளிநாடுகளுக்கு செல்ல தப்பவிடக்கூடாது என அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சாராதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா மாநகர முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார் சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கின் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக சிபிஐ குற்றம்சாட்டி அவருக்கு எதிரான விசாரணையை முடக்கிவிட்டது.

Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம் Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்

மம்தா போராட்டம்

மம்தா போராட்டம்

இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து சில மாதங்களூக்கு முன்பு கொல்கத்தா நகரில் தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யதடை

கைது செய்யதடை

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தன்னை சிபிஐ கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என ராஜீவ் குமார் கோரியிருந்தார. இதன்படி மே24ம் தேதி வரை உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை கைது செய்ய தடை விதித்து இருந்தது.

கைதாக வாய்ப்பு

கைதாக வாய்ப்பு

ஆனால் அதற்கு பிறகு மீண்டும் மேல்முறையீடு செய்த போது, ராஜீவ் குமாரின் கோரிக்கை ஏற்க மறுத்து, அவருக்கு முன்ஜாமின் அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கமிஷ்னுக்கு நோட்டீஸ்

கமிஷ்னுக்கு நோட்டீஸ்

சிபிஐ அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராஜீவ்குமாருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்துள்ளது. இதன்படி இந்தியாவின் எந்த விமான நிலையங்கள் வழியாகவும் ராஜீவ்குமார் வெளிநாடு சென்று தப்பிக்க விடக்கூடாது என் சிபிஐ விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளது. இதனால் ராஜீவ் குமார் மீது சிபிஐயின் பிடி இறுகி உள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
CBI lookout notice to airports against Former Kolkata police chief Rajeev Kumar over Saradha chit fund scam destroying evidence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X