For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொலைபேசி உரையாடல்- நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. கிடுக்குப் பிடி விசாரணை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியாவிடம் தொலைபேசி உரையாடல்கள் குறித்து சிபிஐ கிடுக்குப் பிடி விசாரணை நடத்தியிருக்கிறது.

நீரா ராடியா, அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் தொலைபேசியில் பேசிய விவரங்கள், ரகசியமாக பதிவு செய்யப்பட்டன. இதுபோன்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் பதிவு செய்துள்ளது.

Nira radia

அந்த சி.டி.க்களை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அக்கமிட்டி, 23 உரையாடல்களில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தது

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், 14 உரையாடல்கள் பற்றி விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. அதன்படி, 4 புதிய வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது.

உச்சநீதிமன்ற விசாரணையை அறிக்கையை 2 மாதங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. தற்போது இது தொடர்பாக நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

English summary
The CBI has questioned former corporate lobbyist Niira Radia in connection with the ongoing investigation into her tapped telephone conversations with industrialists, politicians, journalists and others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X