For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸை சேர்ந்த டி.கே.சிவகுமார் வீட்டில் சிபிஐ ரெய்டு.. இன்னும் 11 எம்எல்ஏக்கள் வீட்டில் சோதனை?

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸை சேர்ந்த டி.கே.சிவகுமார் வீட்டில் சிபிஐ ரெய்டு..வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

    இந்திய காங்கிரஸ் தலைவர்களில் மிக முக்கியமான தலைவராக உருவெடுத்துள்ளார் காங். தலைவர் டி.கே.சிவகுமார். தற்போது இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கான ரேஸில் இவர் முன்னிலையில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெறுகிறதோ, அந்த தொகுதிகளில் சிவக்குமாரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.

    CBI raid in DK. Shivakumar house and his friends house

    பாஜக கட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இவர் வீட்டில் ஏற்கனேவே ஒருமுறை வருமான வரித்துறை சோதனை செய்திருந்தது. இவர் மீது வழக்குகளும் பதியப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் டி.கே.சிவகுமார் உறவினர், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவே சிபிஐ இதற்கான அனுமதி வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் வைத்து பாதுகாத்தவர் டி.கே.சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வீட்டிலும் ரெய்டு நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு எதிராக ரெய்டு நடத்த சிபிஐ அனுமதி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    CBI raid in DK. Shivakumar house and his friends house. CBI yet to raid 11 more Congress MLAs house today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X