For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஐ ரெய்டுக்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளே காரணம்.. என்டிடிவி புகார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: என்டிடிவி அலுவலகம் மற்றும் அதன் புரமோட்டர்கள் வீடுகளில் நடைபெற்ற சிபிஐ ரெய்டு அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று அந்த டிவி சேனல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த டிவி சேனல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்டிடிவி அலுவலகம் மற்றும் புரமோட்டர் வீடுகளில் சிபிஐ நடத்திய ரெய்டு அதிர்ச்சியளிக்கிறது.

CBI raid is merely another attempt at silencing the media, says NDTV in a statement

என்டிடிவியின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் தத் என்பவர் அளித்த புககாரின் பேரில் ரெய்டு நடைபெற்றுள்ளது. அவர் தொடர்ச்சியாக தவறான புகார்களை வழக்குகளாக் பல்வேறு கோர்ட்டுகளில் பதிவு செய்து வருகிறார்.

ஆனால் அந்த வழக்குகளில் நீதிமன்றம் எந்த ஒரு சிறு உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இன்த நேரத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியது சட்ட வல்லுநர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுவும் கூட ஒரு பிரைவேட் புகாருக்காக சிபிஐ ரெய்டு.

ஐசிஐசிஐ வங்கியில் வாங்கப்பட்ட கடனை, பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் 7 வருடங்கள் முன்பே திரும்ப செலுத்திவிட்டனர். பல லட்சம், பல கோடி கடனை பாக்கி வைத்துள்ள தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மீது சிபிஐயால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், திருப்ப செலுத்தப்பட்ட ஒரு கடனுக்காக அதுவும் தனியார் வங்கி கடன் தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது.

என்டிடிவி பயமற்ற சுந்திரமான சேனல்.இதனால் ஆளும் கட்சி அரசியல்வாதிகளில் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதே ரெய்டுக்கு காரணம். ஆனால் இந்தியாவில் ஊடக சுதந்திரத்தை காப்பாற்ற என்டிடிவி தொடர்ந்து சுதந்திரமாக செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
It is clearly the independence and fearlessness of NDTV's team that the ruling party's politicians cannot stomach and the CBI raid is merely another attempt at silencing the media, says NDTV in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X