For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது டெல்லி சி.எம். ஆபீஸை சீல் வெச்சிட்டாங்களா.. 'ஷாக்' ஆன மமதா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலத்தை சீல் வைத்துவிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தியதாக வெளியான செய்தி தம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகம், தலைமை செயலகம் ஆகியவற்றில் இன்று திடீரென சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான பழைய ஊழல் வழக்கு மீதான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

CBI raid: Unprecedented, shocked, says Mamata

இருப்பினும் ஒரு மாநில தலைமை செயலகத்தில், மாநில முதல்வரின் அலுவலகத்தில் வரலாறு காணாத வகையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது மத்திய அரசின் மிரட்டல்போக்குதான் என்றே குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முதல்வர் அலுவலகத்தை சீல் வைப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று...இது என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், இது ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என சாடியுள்ளார்.

மேலும் இந்தியாவிலேயே ஊழல் செய்த காரணத்தாக அமைச்சர் மற்றும் அதிகாரியை டிஸ்மிஸ் செய்த ஒரே முதல்வர் நான் தான்.. அந்த வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கிறேன்.. அப்படியான நிலையில் ராஜேந்திரகுமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை என்னிடம் கொடுங்கள் நானே அவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee expressed her support to Kejriwal saying she was shocked to hear of the CBI raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X